எமது பாடசாலை வரலாறு வடமேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தில் எழில் நிறைந்த கிராமமே தெலியாகொன்னை. இது குருணாகல் நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் குருணாகல், கண்டி பிரதான வீதியில் அமைத்துள்ளது. வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் அமைந்துள்ள தெலியாகொள்னை கிராமத்தில் அழகுக்கு அணி செய்வது போன்று இதன் எல்லையில் கொலபெலிகந்த என்ற அழகிய மலைக்குன்றும். வெண்டகுவெவ எனும் வாவியும் அமைந்துள்ளன. இக்கிராமத்தின் மத்திய பகுதியில் ஜூம்ஆ பள்ளி வாயிலுக்கு அருகாமையில் உடையார் மாவத்தை வீதியில் அறிவொளி பரப்பும் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரி 1938 ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை ஏறத்தாழ 37 அதிபர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும், பல்லாயிரக்கணக்காண மாணவர்களையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
06 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 1981.11.18ம் திகதிக்குள் மாணவர் தொகை 99 இக்கலையகத்தின் முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்தர் கொண்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.சங்கரப்பிள்ளை என்பவர் ஆவார் அத்துடன் விபி.ஆறுமுகம் உதவி ஆசிரியராகவும் இப்பாடசாலைக்கு முதலில் இட்ட பெயர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் என்பதாகும். முதல் வகுப்பறை எவ்வித வசதிகளுமற்ற ஓலை வேயப்பட்ட குடிசையாக அமைந்ததோடு முதல் மாணவனாக மரஹம் ஐ. ஆப்தீன் என்பவரும். முதல் மாணலியாக சித்தி ஹம்சியாவும் வரலாற்றில் நீங்கா இடத்தைப்பெற்றுக்கொண்டனர்.
சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கல்வித்தாகம் கொண்ட மர்ஹம் முஹம்மத் கவி என்பவர் உரிய அதிகாரிகளிடம் வேண்டிப் பெற்ற மாபெரும் பொக்கிமே இக்கல்லூரியாகும். பாடசாலை அமைத்திட காணி வேண்டுமென குரல் எழுப்பிய போது தாமாகவே முன் வந்து கால் ஏக்கர் (1/4 ஏ காணியை முதன் முதலாக மனமுவந்து வழங்கிய வள்ளல் மரஹம் இ இப்றாஹிம் முதலாளியாவார். இவரைத் தொடரந்து மர்ஹம்களாக பகு உமர்லெப்பை, எஸ்.எஸ்.ஏ.கரீம், வா.மு.முதலாளி. ரரீந் முதலாளி, மம்மகன் முதலாளி ஆகியோர் காணிகளைக் கொடுத்து உதவினர். இது இன்று (1 1/4) ஒன்றே கால் ஏக்கராக பெருகியிருக்கின்றது.
இப்பாடசாலை ஆரம்பத்தில் 1-5 வரையான வகுப்புக்கள் உள்ள பாலர் பாடசாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது. 1939,10:23ம் திகதி முதல் முதலாக நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டதோடு அப்போதைய கல்வியமைச்சர் தஹநாயக்கவின் காலத்தில் "முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை" எனும் நாமத்தையும் பெற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து 2ம்,3ம்,4ம் தலைமையாசிரியர்களாக வீ.பி ஆறுமுகம், எஸ்எஸ். நாகப்பர். ஏ.ஜே செல்லத்துரை ஆகியோர் கடமையாற்றியதோடு, மாணவர் தொகை 1945 முதற்பகுதியில் 137 ஆ அதிகரித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இக்காலப்பகுதியில்விஷ்ட (1943ல்) பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து 5ம் அதிபராக ஏ.எச்.மொஹிதீன் அவர்கள் பொறுப்பேற்க மிகப் பழைமை வாய்ந்த விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. அதன்பின் 1956:11.10 காலப் பகுதியில் இக்கல்லூரி மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டு கலைப்பிரிவு (உ/த) ஆரம்பமானதோடு மாணவர் தொகை 342 ஆக அதிகரிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். அந்தோடு வரலாற்றில் முதன் முதல் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவனாக அல்ஹாஜ் எஸ்.எச்.ஏரவாக் (பொறியியலாளர்) கணிக்கப்படுகின்றார்.
அதனையடுத்து 1957-1960 காலப்பகுதியில் வேது அதிபராக எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஏ.ஜே.யு உசைன் தம்பி அவர்கள் காணி எடுப்பதில் பாரிய சவால்களை எதிர் கொண்டார். அத்தோடு 1957ல் அப்போதைய கல்வியமைச் கெளரவ பதியுநீன் மஹ்முத் அவர்களினால் பழைய ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு இக்காலப் மாணவர்களுக்கு விழாவும் நடாத்தப்பட்டமை கல்விக்கான விழிப்புணர்வை எடுத்துக்காட்டுகிறது இந்த மாணவர்களும் பிற்காலத்தில் அரசு சேவையில் பகுதியில் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் 7/9 சித்தியெய்திக இணைந்து கொண்டமையும் சிறப்புக்குரிய விடயமாகும். அத்தோடு இன்று வற்றாத கிணறாக எமது பாடசாலைக்கு நீரை அள்ளி வழங்குகின்ற கிணறும் அக்காலத்திலே தான் வெட்டப்பட்டது. அடுத்து 1960-61 காலப்பகுதியில் மரஹம் ஏ.எல்.எஸ்.ஏ காதர் அதிபர் (மூத்த பழைய மாணவர்) பாடசாலை பொறுப்டை ஏற்றதோடு, இவர் பாடசாலை காணியை விஸ்தரிக்க பூரண ஒத்துழைப்பை வழங்கினார். முதன் முதலில் இவ்வூரில் ஆசிரிய சேவையில் இணைந்த இவர் இவ்விடயத்தில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரான கே.யு.எம். சஹிட் முதலாளி அவர்களும் நலன் விரும்பிகளும் இணைந்தே இவ்விடயத்தில் வெற்றி கண்டனர். மேலும் 1961,03,04-1961.07.2 ஜே.எம்.ஹதுறுசிஹ்க என்பவர் சிங்கள் மொழிப்பிரிவில் கடமையேற்றாலும் அம்மொழியில் தொடர்ந்து செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டமையினால் 28.07.1961இல் அவ் அதிபரும் சக ஆசிரியர்களும் மாற்றலாகி மலியதேவ பாலிகா மகா வித்தியாலயம் சென்றமை பற்றியும் வரலாறு சான்று பகருகின்றது.
இதனையடுத்து 1961-1967 வரையான காலப்பகுதியில் எம்.எச்.எம். அப்துல் ரஸாக்.எம்.எம். அபூபக்கர். நாகரபிச்சை ஏ.ஜே. செய்னுல் ஆப்தீன் ஆகிய அதிபர்கள் தொடர்ச்சியாக கடமை புரிந்ததோடு 1967ல் உயர்தர விஞ்ஞான பிரிவும் ஆரம்பமானது எளிலும் போதுமான ஆசிரியர்கள் இப்பிரிவுக்கு கிடைக்காமையினால் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேனடியேற்பட்டது.
அதையடுத்து 13வது அதிபராக பதவியேற்ற மர்ஹம் எம்.ஐ.எம். அவுப் அவர்களது காலத்தை ஒரு மறுமலர்ச்சிக் காலம் எல்லாம். ஏனெனில் இவரது காலத்தில் தான் எமது பாடசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹவின் படை) எனும் பொது நாமம் இடப்பட்டு புகழோங்கிய காலமா கும் அத்தோடு மாணவர் தொகையிலும் துரித வளர்ச்சியேற்பட்டது. மேலும் இக்காலத்திலே யே அறபா, மினா. ஹிறா எனும் பெயரில் இல்லங்கள் பிரிக்கப்பட்டு இவ்வில்லங்களினூடாக தோட்ட வேலைகள், மீலாத் போட்டி, விளையாட்டுப் போட்டி என்பன இல்ல ரீதியாகவே நடாத்தப்பட்டன.
அதனையடுத்து 14வது அதிபராக மரஹம் எச்.எம். பசீர் (1968-69) அவர்களது காலத்தில் பாடசாலைச் சுற்றாடலைச் சுற்று வேலியமைப்பது கட்டாயத் தேவை என உணரப்பட்டு ஊர் விதானைக்கு அறிவிக்கப்பட்டதன் மூலம் பிரச்சினைக்கு நீர்வு காணப்பட்டது.
அதளையடுத்து 15வது அதிபராக என்.சி நெய்னா அவர்கள் (இரு முறை) கடமையை பொறுப்பேற்று, இடை விலகும் மாணவர் தொகையை குறைத்துக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதோடு, கல்வி வளர்ச்சிக்காகவும், பௌதீக வள விருத்திக்காகவும், தங்களது பங்களிப்பை செய்வதில் தவறவில்லை.