பாடசாலை கீதம்
ஹிஸ்புல்லாஹ் நாமமும் ஒழுக்கத்தின்
மேன்மையும் உதித்திட அருள் தருவாய்
எம் புகழ் ஓங்கி என்றுமே திகழ
அனுதினம் உனைப்பணிந்தோம்
கல்வியை பகரும் ஆசானை நாமும்
திசை பெறத் தொடர்ந்திடுவோம்
அழகியல் ஆன்மீகம் உலகியல் கலந்து
வளர்ந்திட அருள் தருவாய்
ஹிஸ்புல்லாஹ் நாமமும் ஒழுக்கத்தின்
மேன்மையும் உதித்திட அருள் தருவாய்
எம் புகழ் ஓங்கி என்றுமே திகழ
அனுதினம் உனைப்பணிந்தோம்
எம் கலைக்கூடம் அறிவியலோடு
நற்பலன் ஓங்கிடவே
எம் கலை அதிபர் ஆசான் பெற்றோர்
உங்களை மதிப்போம் நாம்
ஹிஸ்புல்லாஹ் நாமமும் ஒழுக்கத்தின்
மேன்மையும் உதித்திட அருள் தருவாய்
எம் புகழ் ஓங்கி என்றுமே திகழ
அனுதினம் உனைப்பணிந்தோம்